Home இலங்கை யாழில் வைத்திய சாலை பணியாளர் மீது தாக்குதல்!

யாழில் வைத்திய சாலை பணியாளர் மீது தாக்குதல்!

by admin

யாழ்ப்பாணம் – குறிகட்டுவான் இறங்குதுறையில் வைத்து, புங்குடுதீவு வைத்தியசாலை பணியாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நயினாதீவில் வசிக்கும் குறித்த பணியாளார் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை (31.03.24) , நயினாதீவில் இருந்து, படகில் குறிகட்டுவான் இறங்குதுறையில் வந்து இறங்கிய வேளை, அங்கு காத்திருந்த இருவர் அவர் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.

கடற்படையினர் , பொதுமக்கள் பார்த்திருக்க இருவரும் பணியாளர் மீது சரமாரியாக தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த பணியாளர் சிகிச்சைக்காக யாழ். போதானா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More