Home இலங்கையாழில். உறவினர்களுக்கு இடையில் மோதல் – இளைஞனின் கை துண்டாப்பட்டது!

யாழில். உறவினர்களுக்கு இடையில் மோதல் – இளைஞனின் கை துண்டாப்பட்டது!

by admin

உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு வாள் வெட்டில் முடிவடைந்ததில் இளைஞன் ஒருவர் மணிக்கட்டுடன் கையை இழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் புலோலி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய செல்வநாயகம் செந்தூரன்  எனும் இளைஞனே மணிக்கட்டுடன் ஒரு கையை இழந்துள்ளார்.

புலோலி பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வாள் வெட்டில் முடிவடைந்தது. அதில் இளைஞனின் கை துண்டாடப்பட்டது, படுகாயமடைந்த இளைஞனை மீட்டு , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்

அதன் போது, துண்டாடப்பட்ட கையை வைத்தியர்கள் கேட்ட போது, கை சம்பவ இடத்தில் இல்லை. துண்டாடியவர்களே கையை எடுத்து சென்றோ, தூக்கி வீசி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், தற்போது அவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More