Home இலங்கைசட்டவிரோத மணலுடன் 4 வாகனங்கள் பறிமுதல் – சாரதிகளும் கைது!

சட்டவிரோத மணலுடன் 4 வாகனங்கள் பறிமுதல் – சாரதிகளும் கைது!

by admin

சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட மற்றும் உரிய அனுமதிப் பத்திரங்கள் இன்றி மணல் ஏற்றிச் சென்ற 4 வாகனங்கள் சாவகச்சேரி காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டிருப்பதுடன், அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி காவற்துறையிபிரிவுக்குட்பட்ட மறவன்புலோ, கோவிலாக்கண்டி பகுதிகளில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை வேளையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உழவியந்திரம் ஒன்றையும் அதன் சாரதியையும் சாவகச்சேரிப் காவற்துறையினர் கைது செய்திருந்தனர்.

அத்துடன் உரிய அனுமதிப் பத்திரம் இன்றியும், அனுமதிப் பத்திரத்தில் மோசடி மேற்கொண்டும் மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று டிப்பர் வாகனங்கள் மற்றும் அதன் சாரதிகளையும் சாவகச்சேரி காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More