தீவகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கான வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக நெடுந்தீவிலும் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (07.04.24) அடிக்கல் நாட்டுவதற்கான பூஜைகள் இடம்பெற்றன.
இலங்கை இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்திய தனியார் நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் இந்த பாரிய மின்சார திட்டமானது கடந்தவாரம் அனலைதீவில் முன்னெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்றைய தினம் நெடுந்தீவிலும் திட்ட முன்னேற்பாடாக பூஜைகள் இடம்பெற்றன
நிகழ்வில் மின் பொறியியலாளர் தினேஷ் பாண்டியன் உட்பட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.