அவுஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் கத்திக் குத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கத்திக் குத்து சம்பவத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து, கத்திக் குத்து தாக்குதலை மேற்கொண்ட நபர் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவற்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சிட்னியில் உள்ள வெஸ்ட்ஃபீல்ட் பல்பொருள் அங்காடியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தை அடுத்து குறித்த கட்டிடத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வௌியேற்றப்பட்டு, கட்டிடம் முழுவதுமாக காவற்துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தாக்குதல்தாரி தொடர்பில் காவற்துறையினர் எவ்வித தகவல்களையும் வௌியிடவில்லை.