262
வடமாகாண ஆளுநரின் வாகன தொடரணி, யாழ்ப்பாணம் மீசாலை பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (15.04.24) சிறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணம் – கண்டி நெடுச்சாலையில் வாகன தொடரணி பயணித்துக்கொண்டிருந்த வேளை , மீசாலை பகுதியில் பாதசாரி கடவை ஒன்றில் முன்னால் பயணித்த வாகனம் திடீரென வேகத்தை குறைத்தமையால், பின்னால் சென்ற மூன்று வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானது.
விபத்தில் வாகனத்தில் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படாத நிலையில் வாகனங்கள் சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
Spread the love