கென்யாவில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட கட்டிட இடிபாடுகள் மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி அங்கு இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 170-ஐ தாண்டியுள்ளது. மேலும் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் நைரோபி உள்ளிட்ட பல நகரங்கள் அங்கு வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மேலும் பல இடங்களில் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதனால் பல இடங்களில் மின விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இதற்கிடையே வெள்ளப்பெருக்கு காரணமாக தலைநகர் நைரோபியில் உள்ள மிகப்பழமையான அணையான கிஜாப் சேதமடைந்தது. இதனால் அந்த அணையின் தடுப்புச்சுவர் இடிந்து அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது இதனால் அங்கு சுமார் 1½ லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனா். எனவே வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளதுடன் மீட்பு பணிகள் தொடா்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
கென்யாவில் வௌ்ளத்தில் சிக்கி சுமார் 50 பேர் பலி
Apr 30, 2024 at 07:24
கென்யாவில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வௌ்ளத்தில் சிக்கி சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. தலைநகர் நைரோபிக்கு 60 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மை மஹியுக்கு அருகிலுள்ள கிராம மக்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளை இந்த வௌ்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
சேற்றுக்குள் புதையுண்டுள்ள மக்களை மீட்பதற்கான மீட்புப்பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடுமென அஞ்சப்படுகின்றது. கடந்த மாதம் கென்யாவின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.