இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்றைய தினம் புதன்கிழமை முதல் புதிய முகவரியில் இயங்கவுள்ளது. இதுவரை காலமும் இல.01, 3ஆம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் இயங்கிவந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகம் இன்றைய தினம் புதன்கிழமை முதல் இல. 42 கோவில் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது
புதிய அலுவலகமானது பிரதான வீதியிலிருந்து கோவில் வீதியில் 150 மீற்றர் தூரத்திலும் – வைத்தியசாலை வீதியிலிருந்து பிரதான வீதியை நோக்கிய கோவில் வீதியில் 50 மீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.