தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இடம்பெற்ற மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வௌியிடப்பட்டுள்ளது.
மேற்படி வர்த்தமானியில், தேயிலை, இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாளாந்த ஊதியம் 1,700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில், நாளாந்த ஊதியம் 1350 ரூபாவாகவும், நாளாந்த மேலதிக கொடுப்பனவு 350 ரூபாவாகவும் வழங்கப்படும் என்பதுடன், நாளாந்த ஊதியமாக 1700 ரூபாய் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.