குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி மோதர காவல்துறைப் பிரிவில் நபர் ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றச் செயல் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரும் அதற்கு ஆதரவாகச் செயற்பட்ட நபர் ஒருவரும் நேற்று (05) மோதர கடற்கரையில் உள்ள ரெட்பனாவத்த பிரதேசத்தில் வைத்து மோதர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிம்புலாஎல, புளுமண்டல் மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்த 21, 23 மற்றும் 24 வயதுடைய வர்கள் எனத் தெமாிவித்துள்ள காவல்துறையினா் அவர்களில் ஒருவரிடம் 25 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தொிவித்துள்ளனா்.
மேலும் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, ராகம பகுதியிலுள்ள வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 துப்பாக்கி ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தற்காலிகமாக தங்கியிருந்த இடத்தில், T-56 துப்பாக்கி, அதே ரவைகளின் 2 மெகசின்கள் மற்றும் T-56 ரவைகள் 265, 09 மிமீ ரவைகள் 23 மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
மற்றைய சந்தேகநபரிடம் இருந்து 15 கிராம் 700 மில்லி கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மற்றுமொரு சந்தேக நபரிடம் இருந்து 15 கிராம் 700 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
மோதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்