இலங்கைப் பிரஜை அல்லாதவர்கள் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு சட்டரீதியான தடை எதுவும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பிரஜை அல்லாத ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதை மட்டும் இலங்கைச் சட்டம் தடுக்கும் அதே வேளை குடிமகன் அல்லாதவர்கள் தேர்தலில் வாக்களிப்பதையும் சட்டம் தடை செய்கிறது எனவும் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவா் தொிவித்துள்ளாா்.
மேலும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்புமனுவில் கையெழுத்திடவில்லை எனவும், அவர் ஒருபோதும் தமது தேசிய முன்னணியின் பொதுச் செயலாளராக இருந்ததில்லை எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடனான அரசியல் கூட்டணியை முறித்துக் கொண்ட காலஞ்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர மற்றும் மறைந்த ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோரால் தமது தேசிய முன்னணி உருவாக்கப்பட்டது எனவும் தொிவித்துள்ளாா்.
குறித்த முன்னணியானது ஜாதிக பெரமுனவின் பொதுச் செயலாளராக ருவான் பெர்டினாண்டாஸ் இருந்த போது டயானா கமகேவின் கணவர் பொதுச் செயலாளா் பதவியை பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.