215
மூதாட்டி ஒருவரிடம் கைபேசியை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் கைதான மூவரையும் நீதிமன்று குற்றவாளியாக கண்டு அவர்களுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து , அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.
பருத்தித்துறை தும்பளை பகுதியில் பழைய பொருட்கள் சேகரிக்க வாகனம் ஒன்றில் சென்ற மூவர் , வீட்டில் தனித்திருந்த மூதாட்டியின் கைபேசியை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் பருத்தித்துறை காவல்துறையினரினால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில் , மூவரையும் மன்று குற்றவாளியாக கண்டு, மூவருக்கும் தலா 06 மாத கால சிறைத்தண்டனை விதித்து, அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்தது. அதேவேளை பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு குற்றவாளிகளான மூவரும் தலா 50 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் மன்று உத்தரவிட்டது.
Spread the love