169
யாழ்ப்பாணத்தில் சுமார் 30 இலட்ச ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகளை கடத்தி சென்றவர்களை காவல்துறையினா் மடக்கி பிடிக்க முற்பட்ட நிலையில் தப்பி சென்றுள்ளனர். சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ள நிலையில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனமும் மரக்குற்றிகளையும் காவல்துறையினா் மீட்டு சாவகச்சேரி காவல் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.
சாவகச்சேரி காவல்துறையினா் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கனகம்புளியடி சந்திக்கு அருகில் வீதி கடமையில் இருந்த வேளை , சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் ஒன்றினை வழிமறித்து சோதனை செய்த போது டிப்பர் வாகனத்தில் மண்ணுக்குள் புதைத்து பால மர குற்றிகளை கடத்தி செல்லவது தெரியவந்துள்ளது.
அதனை அடுத்து கடமையில் இருந்த இரு காவல்துறை உத்தியோகஸ்தர்களுடனும் டிப்பர் சாரதி மற்றும் உதவிக்கு வந்தவருமாக இருவரும் சமரசம் பேசி ஒரு இலட்ச ரூபாய் வரையில் கையூட்டு வழங்க தயார் என கூறியுள்ளனர்.
அதனை ஏற்க மறுத்த காவல்துறையினா் வாகனத்தை காவல் நிலையத்திற்கு எடுத்து செல்ல முயற்சித்த வேளை டிப்பர் சாரதியும் மற்றையவரும் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர்.
டிப்பர் வாகனத்தை காவல்நிலையத்திற்கு எடுத்து வகாவல்துறையினா் , காவல் நிலையத்தில் டிப்பரில் இருந்த மண்ணை பறித்த வேளை, மண்ணுக்குள் 150 பாலை மர குற்றிகள் காணப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி சுமார் 30 இலட்ச ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை , தப்பி சென்ற இருவரையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
Spread the love