238
மலேசியாவுக்கு பணிக்கு சென்ற இலங்கை இளைஞன் ஒருவா் பொயிலர் வெடித்து உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா ப்ரௌன்ஸ்வீக் தோட்ட மோட்டிங்ஹேம் பிரிவைச் சேர்ந்த 24 வயதான துரைராஜ் ராஜ்குமார் டேவிட்சன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மலேசியாவில் உள்ள மினரல் வோட்டர் நிறுவனம் ஒன்றுக்கு ஒரு வருடத்திற்கு முன்னர் வேலைக்காக அவா் சென்றிருந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) இந்த அனர்த்தம், இடம்பெற்றுள்ளது. அவரது உடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு இறுதி கிரியைகள் இடம்பெறவுள்ளன.
Spread the love