249
நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை தவிர்க்க முடியாத சில சட்டரீதியான அனுமதிகள் தாமதமானமையால் கப்பல் சேவை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கப்பல் சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
காங்கேசன் துறைக்கும் தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் இடையிலான கப்பல் சேவை நாளைய தினம் திங்கட்கிழமை ஆரம்பமாக இருந்தது.இந்நிலையில் தவிர்க்க முடியாத சில சட்டரீதியான அனுமதிகள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் கப்பலின் தாமதமான வருகையாலும் நாளைய தினம் கப்பல் சேவை இடம்பெறாது எனவும், 17 ஆம் திகதி முதலே சேவைகள் ஆரம்பமாகும்.
நாளைய தினம் கப்பல் பயணத்திற்கு பதிவு செய்த பயணிகள் 17ஆம் திகதிக்கு பின்னர் அவர்கள் விரும்பிய திகதிக்கு மாற்றம் செய்து பயணிக்க முடியும். அல்லது கப்பல் பயணத்திற்கு செலுத்திய கட்டணத்தை மீள பெறமுடியும். என கப்பல் சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
Spread the love