யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்க இணைச் செயலாளர்
த.சிவரூபன் வெளியிட்ட அறிக்கையிலையே
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ள கல்வி சாரா ஊழியர்கள் தொடர்ச்சியாக தமது சம்பள இடர்பாட்டிற்கான தீர்வுகளை 8 வருடங்களிற்கு மேலாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் அமைச்சிடம் இது தொடர்பாக கடிதங்களை எழுதியும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டும் எந்தப்பலனும் இல்லாத காரணத்தினால் நாம் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தை மேற்கொண்டுள்ளோம்.
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் மோகன் டி செல்வா காலப்பகுதியில் அதன் பேரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 2016 இற்கு பின் இன்று வரை சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படவில்லை.அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு 107% ஆல் 2020ம் ஆண்டில் அதிகரித்த போதும் எமக்கு 93% க்கு குறைவாகவே அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது.
அதுமட்டுமன்றி எமது இக் கோரிக்கைகள் கடந்த அரசு காலப்பகுதியில் நிதியமைச்சு, சம்பள நிர்ணய ஆணைக்குழு மற்றும் பிரதம மந்திரி செயலாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மீண்டும் இந்த ஆட்சியில் மேற்கொண்ட குழுக்களிற்கு நாம் நேரடியாக எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி அதனை அவர்கள் ஏற்றுக் கொண்ட பின்னரும் இவ்வளவு காலம் தாழ்த்துவது எம்மை இத் தொடர்ச்சியான வேலைநிறுத்த போராட்டத்திற்கு பலவந்தமாக இட்டுச் சென்றது.
இவ்வாறாக நாம் எமது நியாயமான இச்சம்பள முரண்பாடு, மற்றும் சம்பள அதிகரிப்புகள் பேரிக்கைகளை 8 வருடங்களுக்கு மேலாக கோரிக்கை விடுத்து பல உத்தரவாதங்கள், வாக்குறுதிகளள் தரப்பட்டும் அவை நிறைவேற்றாது காலம் தாழ்த்தும் இச் செயற்பாட்டினால் அதிருப்தி அடைந்த நாம் கடந்த 02ஆம் திகதி முதல் மதியம் 12 மணியளவில் இருந்து எமது தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தை இறுக்கமான முறையில் மேற்கொண்டுள்ளோம் – என்றுள்ளது.