கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் பிரதமராக இருக்கும் லீ சியென் லூங் ( Lee Hsien Loong ) பதவி விலகியுள்ளார். அவர், ஆட்சி அதிகாரத்தை துணை பிரதமரும் நிதியமைச்சருமான லோரன்ஸ் வோங்கிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார். இது சிங்கப்பூரின் வரலாற்றில் 59 ஆண்டுகள் நீடித்த ஓர் அரசியல் சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது
லீ சியென் லூங் ஒரு மூத்த அமைச்சராக அமைச்சரவையில் நீடிப்பார் என்ற போதிலும், இந்த மாற்றம், சிங்கப்பூரின் அரசியல் அவரது குடும்பத்தின் நிழலில் இருந்து வெளியேறுகிறது என்பதைக் குறிக்கிறது, என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனா்.
சிங்கப்பூர் 1965ஆம் ஆண்டு சுதந்திர நாடாக உருவாகியதிலிருந்து 3 பிரதமர்கள் மாத்திரமே அங்கு ஆட்சி செய்துள்ளனர். நாட்டின் முதலாவது பிரதமரும் நவீன சிங்கப்பூரின் ஸ்தாபகர் என அழைக்கப்படுபவருமான லீ குவான் யு( Lee Kuan Yew) , 25 ஆண்டுகள் பதவி வகித்திருந்ததாா் . அவரது மகனான லீ சியென் லூங்கே தற்போது பதவியுள்ளா்ா. அவரது பதவி விலகலுடன் சிங்கப்பூரில் லீ குடும்பத்தின் அரசியல் சகாப்தம் நிறைவிற்கு வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.