172
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் கனமழை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த 13ம் திகதி இலங்கைக்கு தெற்கே வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 20ம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளது.
குறிப்பாக 18,19 ம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.வருடந்தோறும் சித்திரை சிறு மாரி என்ற கருத்து எங்களிடையே மிக நீண்ட காலமாக உள்ளது. இதனைச் சிலர் ‘சித்திரைக்குழப்பம்’ என்ற பெயரிலும் அழைப்பர்.
இம்முறை சித்திரைத் குழப்பம் சித்திரை மாத இறுதிநாட்களில் (தமிழுக்கு) காற்றுச் சுழற்சியோடு ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை எதிர்வரும் 20ம் திகதிக்கு பின்னர் கிழக்கு வங்காள விரிகுடாவில் மேலுமொரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்புள்ளது. எனினும் இதனை எதிர்வரும் 19 ம் திகதிக்கு பின்னரே உறுதிப்படுத்த முடியும்.
அதேவேளை இந்த நிகழ்வுகளின் பின்னர் மீண்டும் வெப்பநிலை அதிகரிக்கும் என மேலும் தெரிவித்தார்.
Spread the love