185
யாழ்ப்பாணம் , இணுவில் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் உணவகங்களை நடாத்திய உணவாக உரிமையாளர் மூவரை கடுமையாக எச்சரித்த நீதிமன்றம் , அவர்களுக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளது.
இணுவில் பகுதிக்கான பொது சுகாதார பரிசோதகர் சி. சிவானுஜன் இணுவில் பகுதியில் உள்ள உணவகங்களில் திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டார்.
அதன்போது மூன்று உணவகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த நிலையில் , குறித்த உணவக உரிமையாளர்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.
குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை தம் மீதான குற்றச்சாட்டுக்களை உரிமையாளர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவர்களை கடுமையாக எச்சரித்த மன்று , 25 ஆயிரம் , 15 ஆயிரம் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் என மூவருக்கும் 60 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.
Spread the love