400
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் சிக்கி 670 பேர் உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (24.05.24) , குறித்த நிலச்சரிவு ஏற்பட்டு பெருமளவான மக்களும் பல வீடுகளும் மண்ணில் புதையுண்டன.
தற்போதும் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் விசேட மீட்பு பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், குறித்த இடம் தொடர்பில் ஆராயச் சென்ற ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், அங்கு சுமார் 670 பேர் உயிரிழந்திருக்க கூடும் என எனத் தெரிவித்துள்ளனர்.
150க்கும் மேற்பட்ட வீடுகளும் முற்றாக புதையுண்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
Spread the love