189
கனடா நாட்டிற்கு செல்வதற்கு தயாராக இருந்த இளைஞன் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் மட்டுவில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி – புத்தூர் வீதியில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து , மதிலுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் , மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளான்.
மட்டுவில் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய பி.பானுஜன் எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை விபத்தில் உயிரிழந்த இளைஞன் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை கனடா நாட்டிற்கு பயணம் ஆவதற்கு தயாராக இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்னர்.
Spread the love