213
இராணுவத்தினர் மின்சார கட்டணம் சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலையில், அதனை செலுத்தது முகாமை அப்புறப்படுத்தி விட்டு சென்றுள்ளனர்.
மானிப்பாய் கிறீன் வைத்தியசாலையின் ஒரு பகுதியில் இராணுவத்தினர் முகாம் அமைத்து நிலைகொண்டிருந்தனர். சுமார் நான்கு ஆண்டுகாலமாக முகாமிற்கு வழங்கப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தை செலுத்தாத நிலையில் , நிலவையாக 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இருந்த வேளை முகாமை அப்பகுதியில் இருந்து அகற்றி அங்கிருந்து வெளியேறி உள்ளனர்.
வைத்தியசாலை தென்னிந்திய திருச்சபையின் ஆளுகைக்கு உட்பட்டது என்பதனால் , அது தொடர்பில், தென்னிந்தியத் திருச்சபையின் பேராயர் பத்மதயாளன் ஆண்டகையைத் கேட்டபோது; “ இராணுவத்தினர் குறித்த கட்டடத் தொகுதியில் தமது முகாமை இயக்கி வந்தனர். அந்தக் காலப்பகுதியில் முகாமின் மின் கட்டணமாக 4 இலட்சத்துக்கு 50 ஆயிரம் ரூபா நிலுவை செலுத்தப்படாமல் உள்ளது. இந்தத் தொகையை இராணுவமே செலுத்தவேண்டும்” என்றார்.
Spread the love