அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தம்மைப் பற்றிய தவறான செய்திகளை மறைக்க டிரம்ப் பணம் வழங்கியமை தொடர்பாக அவா் மீது 34 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.
எதிா்வரும் ஜூலை 11 ஆம் திகதியன்று அவருக்கு தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் அதேவெளை ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் அதிகபட்சமாக 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட முதல் ஜனாதிபதியாக கருதப்படும் டிரம்ப் குறித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.