190
யாழ்ப்பாணத்தில் நீர்க் குட்டை ஒன்றினுள் துவிச்சக்கர வண்டியுடன் விழுந்து இரு சிறுமிகள் நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளனர்.
ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த 11 வயதுடைய நிரோசன் விதுசா மற்றும் 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா ஆகிய இரு சிறுமிகளுமே உயிரிழந்துள்ளனர்.
குறித்த இரு சிறுமிகளும் வீட்டில் இருந்து துவிச்சக்கர வண்டியில் கடைக்கு சென்றுள்ளனர். கடைக்கு சென்ற இருவரையும் காணவில்லை என உறவினர்கள் தேடிய போது கடைக்கு சற்று தொலைவில் உள்ள குட்டைக்குள் இருவரும் சடலமாக காணப்பட்டுள்ளனர்.
வரம்பு வழியாக துவிச்சக்கர வண்டியை செலுத்திய வேளை , துவிச்சக்கர வண்டியுடன் தவறி குட்டைக்குள் விழுந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இரு சிறுமிகளின் சடலங்களும் மீட்கப் பட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
ReplyForward |
Spread the love