190
யாழ்ப்பாணம் அச்சுவேலி உலவிக்குளம் ஆலய உப தலைவர் மீது கோடாரியினால் கொத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அச்சுவேலி பகுதியை சேர்ந்த 38 வயதான இளைஞன் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் வேலைக்கு செல்வதற்காக இன்றைய தினம் வியாழக்கிழமை காலை , தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை , உலவிக்குளம் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஐவர் அடங்கிய வன்முறை கும்பல் இளைஞனை வழிமறித்து தாக்குதல் மேற்கொண்டு , கோடரியினால் கொத்தி படுகாயம் ஏற்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
தாக்குதலாளிகள் தங்கள் முகங்களை கறுத்த துணியினால் மூடிக்கட்டி இருந் தனர் என தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார் .
காயமடைந்த இளைஞன் அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை , குறித்த ஆலயத்திற்கு சொந்தமான ஆலயத்துடன் உள்ள காணியினை அறிக்கைப்படுத்தி , ஆலய நிர்வாகத்தினரால் வேலி அமைக்கப்பட்ட போது , ஆலய காணியையும் , அருகில் உள்ள காணியையும் இணைத்து மைதானமாக பாவித்து விளையாடி வந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனா்.
இந்தநிலையில் , கடந்த ஏப்ரல் மாதம் காணியை சுற்றி அடைக்கப்பட்டு இருந்த வேலி இனம் தெரியாத நபர்களால் பிடுங்கி எறியப்பட்டு இருந்தது. அது தொடர்பில் அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணையில் முன்னெடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love