197
யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் உணவு கையாளும் நிலையத்தினை நடாத்திய உரிமையாருக்கு 15 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த நீதிமன்று , உரிமையாளரை கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளது
ஏழாலை பகுதியில் பொது சுகாதார பரிசோதகரால் முன்னெடுக்கப்பட்ட திடீர் பரிசோதனையில் சுகாதாரமற்ற முறையில் , சுகாதார சீர்கேட்டுடன் உணவு கையாளும் நிலையம் இயங்கி வந்த நிலையில் , அதன் உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.
குறித்த வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது , மன்றில் முன்னிலையான உரிமையாளர் தன் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து , 15 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று , உரிமையாளரை கடுமையாக எச்சரித்து விடுவித்தது.
அதேவேளை கடந்த வாரம் சுன்னாகம் பகுதியில் உள்ள உணவு கையாளும் நிலையம் ஒன்றில் காலாவதியான மற்றும் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படுத்த கூடிய , உண்பதற்கு ஒவ்வாத உணவு பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக உரிமையாளருக்கு 83 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப் பிடத்தக்கது.
Spread the love