187
நாட்டை அதாள பாதாளத்தில் தள்ளிய ராஜபக்ஷ தரப்புடன் இணைந்து செயற்படும் நபர்களுடன் ஒரு நாளும் நான் இணைந்து செயற்படப்போவதில்லை. அவ்வாறானவர்களுடன் எந்தவித பேச்சுகளும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் எமது மக்களுக்கானை தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு எம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றேன்.
பாடசாலைகளுக்கு, வைத்தியசாலைகளுக்கு என உதவிகளைச் செய்வது தேர்தலுக்காக அல்ல. அது எனது நீண்ட நாள் திட்டம். இதற்கமையவே நீண்ட காலமாக அனைத்து இடங்களிலும் இதனை ஒரு பணியாகச் செய்து வருகின்றேன்.
இப்போது நாட்டின் அரசியல் வேறு வியூகத்தில் செல்கின்றன. அதிலும் ஜனாதிபதி ரணிலுடையடைய செயற்பாடு ஜனாதிபதித் தேர்தலை முன்னிறுத்தி நடக்கின்றதேயொழிய சாதாரண மக்களுக்கானது அல்ல.
நான் இப்போது புதிய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றேன். இதற்கு அனைவரும் ஆதரவை வழங்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
Spread the love