இலங்கையில் தேர்தல் நடத்துவதனால் சர்வதேச நாணய நிதியத்திற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என தொிவித்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் சிரேஸ்ட தலைவர் பீட்டர் ப்ரூவர் எந்தவொரு நாட்டின் ஜனநாயகத்தையும் சர்வதேச நாணய நிதியம் மதிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை இலங்கையில் தேர்தல் நடத்தப்பட்டால் அது சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் நேரத்தை பாதிக்கும் என்பதனால் உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து புதிய கால அட்டவணையை தயாரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளாா்.
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட கடன் வசதிக்கான இரண்டாவது மதிப்பீடு தொடர்பான எண்ணங்களை தெரிவிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை பிரதிநிதிகள் நடத்தும் விசேட ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்