209
கடந்த காலங்களில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் படுகொலை, ஊடக நிறுவனம் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை துரித கெதியில் முன்னெடுக்க சம்பந்தப்பட்ட தரப்பிடம் தான் வலியுறுத்துவேன் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி அளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு வாகனங்களுக்கு தீ வைத்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டமை, ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு அதனை ஈபிடிபி செய்தது என எம் மீது பழியை போட்டு விடுவார்கள். தற்போது ஈபிடிபி யின் பெயரை பாவிப்பதில்லை.
கடந்த காலங்களில் வன்முறைமீது நாட்டம் கொண்டவர்கள் உயிராபத்தை ஏற்படுத்தி , அதனை ஈபிடிபியின் மீது போட்டு எமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தினர் என தெரிவித்தார்.
அதன் போது, கடந்த காலங்களில் ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் கிடப்பில் உள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் சுட்டிக்காட்டிய போது,
குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் ஆராய்ந்து , வழக்கு விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் வலியுறுத்துவேன் என தெரிவித்தார்.
அத்துடன் தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிய தமிழ் தலைவர்கள், இயக்க வேறுபாடுகள் இன்றி போராளிகள் ஆகியோருக்கு, சிலைகளை அமைத்து அவர்கள் அனைவரையும் வரலாற்றில் நிலைநிறுத்த எதிர்பார்ப்பார்த்துள்ளேன் எனவும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தேசிய நல்லிணக்கம் ஊடாகவும், அணுகுமுறைகள் ஊடாக மட்டுமல்லாது , எமது தற்துணிவுமே யாழ் மாவட்டத்தில் எமது இனத்தின் வரலாற்றை சொல்லும் மன்னர்கள் பலரது சிலைகளை நிறுவி உள்ளோம்.
அந்த வகையில், தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிய தமிழ் தலைவர்கள், போராளிகள், மக்கள் எனப் பலரும் நினைவுகூரப்பட வேண்டியவர்களாக உள்ளனர்.அவர்களை நினைவுகூருவதற்கான ஏற்பாடுகளும் குறிப்பாக அவர்களது நினைவுச் சிலைகள் நிறுவப்படுவது அவசியமாகும். இதில் கட்சி பேதங்களோ இயக்க வேற்றுமைகளோ இருக்கப்போவதில்லை.
இவற்றினூடாகவே எமது மக்களின் இருப்புக்கள் மற்றும் வரலாறுகள் அடுத்த சந்ததிக்கு உண்மைத்தன்மையுடன் எடுத்துச் செல்லப்படுவதற்கான வழிமுறையாக அமையும் என நினைக்கின்றேன்.
அதனடிப்படையில் தமிழ் மக்களின் தேசிய தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் உள்ளிட்ட நினைவுகூரப்பட வேண்டிய தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிய தமிழ் தலைவர்கள், போராளிகள், மக்கள் எனப் பலரும் உள்ளனர்.
அவர்களது நினைவேந்தல்களை இயக்க வேறுபாடுகள் இன்றி, சிலைகளை அமைத்து அவர்கள் அனைவரையும் வரலாற்றில் நிலைநிறுத்த எதிர்பார்ப்பார்த்துள்ளேன்.
தலைவர்கள் போராளிகளின் சிலைகளை யாழ்ப்பாண கோட்டையை சுற்றி அமைத்து , அவர்களின் வரலாறுகளை பொறிக்க எண்ணியுள்ளே ன் என தெரிவித்தார்.
Spread the love