Home இலங்கைஅரசியல் அமைப்பில்  13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் பிரச்சனை என்ன?

அரசியல் அமைப்பில்  13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் பிரச்சனை என்ன?

by admin

இலங்கையில் அரசியல் அமைப்பில்  இருக்கின்ற அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துகின்றபோது ஏன் பிரச்சினைகள் ஏற்படுத்தப்படுகின்றன  என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்கள் ஓரணியில் திரண்டு இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டியது மிகவும்  அவசியம் என வலியுறுத்திய அவர், கமராக்களுக்காக அல்லாமல் மனதளவில் அத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தம் என்பது  இன்று அல்லது நேற்று வந்த ஒன்றல்ல. இந்த 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றபோது ஏன் பிரச்சினைகள் எழுகின்றன?

நாட்டிலுள் இனங்களும் மதங்களும் ஏனைய இனங்களையும் மதங்களையும் மதிப்பதில்லை. அதுவே இதற்கான பிரதான காரணமாக உள்ளது. அதனால் அனைவரும்  சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். சிங்கள மொழி பேசும்  சிங்கள மக்கள், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தொடர்பில் நம்பிக்கையின்றிச் செயற்படுகின்றனர். அவ்வாறே தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் தொடர்பில் நம்பிக்கையின்றி செயற்படுகின்றனர்.

இவ்வாறு ஒவ்வொருவரும் நம்பிக்கையற்ற நிலையிலேயே இருக்கின்றனர். இதுவே இங்குள்ள பாரிய பிரச்சினையாகும்.

எனவே, அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதனூடாகவே நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். அதுவே மிக முக்கியமான விடயமாக உள்ளதாக சஜித் பிரேமதாஸா வலியுறுத்தியுள்ளார்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More