185
யாழ்ப்பாணத்தில் 18 கிலோ கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவரை விசேட அதிரடி படையினர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (16.06.24) கைது செய்துள்ளனர்.
அல்லைப்பிட்டி பகுதியில் கேரளா கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடி படையினர் 18 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளனர். அவற்றை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரையும் , மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
Spread the love