வடமாகாணத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் கனமழையுடனான காலநிலை நிலவும் என வானிலையாளரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் மூத்த விரிவுரையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவக்காற்று மழையின் இரண்டாவது சுற்று தற்போது ஆரம்பமாகியுள்ளதால், கொழும்பு, களுத்துறை, காலி, இரத்தினபுரி, நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்கள் அடுத்து வரும் ஏழு நாள்களுக்கு கனமழை பெறும் வாய்ப்புள்ளதுடன். இம் மாவட்டங்களின் சில பிரதேசங்கள் வெள்ள இடர்களுக்கு உட்பட வாய்ப்புள்ளது.
அடுத்த வாரமளவில் மத்திய வங்காள விரிகுடாவில் காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. எனினும், அடுத்த வார முற்பகுதியிலேயே இதனை உறுதிப்படுத்த முடியும் என்றார்.