738
யாழ் மாவட்ட மகளிர் விவகார குழுக்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக பட்டம் பெற்ற கண் பார்வையற்ற தம்பதியினர்களுக்கு அவர்களது விடாமுயற்சியினூடாக கல்விப்புலம் சார்ந்த சாதனையைப் பாராட்டி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் முன்னிலையில் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
பட்டம் பெற்ற தம்பதியினரை யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மற்றும் உதவி மாவட்ட செயலாளர் தர்சினி ஆகியோர் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசும் வழங்கி கௌரவித்தனர்.
இந் நிகழ்வில் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர், மாவட்ட உளவளத்துணை உதவியாளர், யாழ் மாவட்ட மகளிர் சம்மேளன அங்கத்தவர்கள், நலன்புரிச் சங்கத்தின் தலைவர், சங்கானை மரக்கறி வியாபாரிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Spread the love