பேருந்து ஒன்றும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞா்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் – பாதெனிய வீதியில் தலாவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (23) அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் எப்பாவல பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 21 வயதுடைய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
இரத்தினபுரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சுற்றுலா செல்வதற்காக பயணித்த பேருந்துடன் நான்கு பேர் பயணித்த முச்சக்கரவண்டி மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த இருவர் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.