192
பெறுமதியான திறன் பேசியை (Smart phone) ஒன்றினை திருடிய குற்றச்சாட்டில் பெண்ணொருவரையும் , அதனை வாங்கிய குற்றத்தில் இளைஞன் ஒருவரையும் யாழ்ப்பாண காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனது கையடக்க தொலைபேசி திருடப்பட்டதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் , களவாடப்பட்ட தொலைபேசியை உடைமையில் வைத்திருந்த இளைஞனை காவல்துறையினர் கைது செய்து தொலைபேசியையும் மீட்டு இருந்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் , குறித்த தொலைபேசியை பெண்ணொருவரே தனக்கு விற்பனை செய்ததாக தெரிவித்ததை அடுத்து , அப்பெண்ணையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட இருவரையும் காவல்துறையினர் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love