219
தனது தாயும் , சித்தப்பாவும் , தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறி கொழும்பை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவா் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளாா்.
கொழும்பில் தனது தாய் மற்றும் சித்தப்பா (தாயின் இரண்டாவது கணவர்) ஆகியோர் அடித்து துன்புறுத்துவதால் வீட்டை விட்டு வெளியேறி யாழ்ப்பாணம் வந்ததாகவும் , யாழ்ப்பாணத்தில் வேறு நபர்களை தெரியாத காரணத்தால் காவல் நிலையத்தில் தஞ்சம் கோரி வந்ததாகவும் சிறுவன் தெரிவித்துள்ளாா் இது தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love