விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பல ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் அவா் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் அமெரிக்க இரகசிய ஆவணங்களை வெளியிட்டதற்காக ஜூலியன் அசாஞ்சே மீது அமெரிக்க நீதித்துறை 18 குற்றச்சாட்டுகளை பதிவு செய்ததனையடுத்து , அவர் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி கைது செய்யப்பட்டு லண்டனில் உள்ள அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையான பெல்மார்ஷ் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது