343
விசர்நாய்க் கடிக்கு இலக்கான நான்கு வயது சிறுமியொருவர் நேற்றைய தினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி குமாரசாமிபுரம் பகுதியை சேர்ந்த நான்கு வயதாக சிறுமி விசர்நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் , சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.
Spread the love