போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் பயிற்சி பட்டறையொன்று யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடாத்தப்பட்டது.
மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தினால் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான இந்த பயிற்சி பட்டறை யாழ். நல்லூர் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன் பொழுது ஊடகங்களுக்குரிய போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான கடமைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
குறித்த பயிற்சி பட்டறையில் கொழும்பு போதைப்பொருள் தகவல் நிலைய சிரேஸ்ட நிகழ்ச்சி திட்ட அதிகாரி எச் ரஹீம் , யாழ்,மாவட்ட நிகழ்ச்சி திட்ட அதிகாரி ஏ,கோடீஸ் மற்றும் யாழ் மாவட்ட ஊடகவியலாளர்கள் என கலந்து கொண்டனர்.