யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட இடத்தினை சரித்திர பிரசித்தி பெற்ற இடமாக பிரகடனப்படுத்த வேண்டும் என சத்திர சிகிச்சை பேராசிரியரும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் மருத்துவ பீடாதிபதியும் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உப தலைவருமாகிய வைத்தியர் சு.ரவிராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானிய சமூக முன்னேற்ற மையத்தின் மரபுரிமை அலகின் நிதி பங்களிப்புடனும் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் அனுசரணையுடனும் ஆனைக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்று முன் தினம் சனிக்கிழமை (20.07.24) யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
அகழ்வு பணிகள் இடம்பெற்ற பகுதிகளை சரித்திர இடமாக பிரகடனப்படுத்தி, அதனை சுற்றுலா தலமாக மாற்றும் போது எமது வரலாறுகளை பலரும் அறித்து கொள்வார்கள்.
அதேவேளை யாழ்பபாண பல்கலைக்கழகம் மட்டுமல்ல ஏனைய பல்கலை மாணவர்களுக்கும் அவ்விடங்களில் ஆய்வு பணிகளை முன்னெடுக்க அதொரு உந்து சக்தியாக மாறும்.
எனவே, இது தொடர்பில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்தி, ஆனைக்கோட்டை பகுதியில் அகழ்வு பணிகள் இடம்பெற்ற இடங்களை சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களாக பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார்
ஆனைக்கோட்டை தொல்லியல் அகழ்வாய்வின் நிறைவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்.
பிரித்தானிய சமூக முன்னேற்ற மையத்தின் மரபுரிமை அலகின் நிதி பங்களிப்புடனும் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் அனுசரணையுடனும் ஆனைக்கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் யாழ்ப்பாண பண்பாட்டு மையத்தில் நேற்று முன் தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. .
யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் வாழ்நாள் பேராசிரியர் பரம புஷ்பரட்ணத்தின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சத்திர சிகிச்சை பேராசிரியரும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் மருத்துவ பீடாதிபதியும் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உப தலைவருமாகிய ரவிராஜ் கலந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், துறைசார் வல்லுனர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.