487
கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞனை காணவில்லை என யாழ்ப்பாணம், மானிப்பாய் காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மானிப்பாய் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் கொழுப்பில் பணியாற்றி வந்துள்ளார். விடுமுறைகளின் போது யாழ்ப்பாணத்திற்கு வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக வீட்டாருடன் தொடர்பின்றி போயுள்ளார். அதனை அடுத்து வீட்டார் அவர் பணியாற்றிய இடத்தில் விசாரித்த போதும் எந்த தகவலும் கிடைக்காத நிலையில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் பிரகாரம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love