797
யாழ்ப்பாணத்தில் பனை வார கண்காட்சி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை வரையில் நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியில் பனையிலிருந்து கிடைக்கும் பல்வேறு வகையான உணவு உற்பத்திப் பொருட்களும், கைப்பணிப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பனை தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களும் , வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து குறித்த கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
Spread the love