யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மறும் வணிக பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு, பதிவு செய்த மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் மற்றும் அறிமுக நிகழ்வு நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.
முகாமைத்துவ கற்கைகள் மறும் வணிக பீடாதிபதி பேராசிரியர் என். கெங்காதரன் தலைமையில் கலாசாலை வீதியில் அமைந்துள்ள முகாமைத்துவ கற்கைகள் மறும் வணிக பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து தொழில் நிருவாகமாணி மற்றும் வணிகமாணி கற்கைநெறிகளுக்குத் தெரிவுசெய்யப்பட் சுமார் 600 புதுமுக மாணவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பல்கலைக்கழகத்தின் பதிவாளர், நூலகர், மாணவர் நலச்சேவைகள் பணிப்பாளர் மற்றும்
முகாமைத்துவ கற்கைகள் மறும் வணிக பீடத்தின் துறைத்தலைவர்கள் மற்றும் இணைப்பாளர்கள் மாணவர்களுக்கான வழிகாட்டல் மற்றும் அறிமுக உரைகளை ஆற்றினர்.