ஊரின் வளமறியோம் உள்ளகதை நாமறியோம்
பாரெல்லாம் அளந்துவாறோம் பாட்டி கதை நாமறியோம்
படிக்கும் படிப்பிலெல்லாம் எங்கள் கதை ஏதும் இல்லை
பொழுதுபோக்கில் கூட எம்மைப்பற்றி ஏதுமில்லை
எங்கள் ஊரில் என்ன உண்டு ஏது உண்டு தெரியவில்லை
தெரிந்துகொள்ளத் தேவையில்லை தெரிந்தும் ஏதும் நன்மையில்லை
சோதனைக்கு புள்ளியில்லை தொழிலுக்கேதும் தகுதியில்லை
இந்த நிலை எங்களுக்கு எப்படித்தான் வந்துற்றதோ?
உற்பத்தி மறந்துவிட்டோம் உருவாக்கம் இழந்துவிட்டோம்
வாங்கி வாழுகின்ற மனிதர்கள் நாங்கள் ஆகிவிட்டோம்
எங்களை விளங்கிக்கொண்டு எங்கள் சுற்றம் அறிந்துகொண்டு
வாழும் வாழ்க்கை ஆக்கிக்கொள்வோம் வாழும்
வாழ்க்கை ஆக்கிக்கொள்வோம்
சி.ஜெயசங்கர்