யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தில் வெடி மருந்துகளை கொண்டு சென்ற இளைஞன் ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொடிகாமம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்றைய தினம் வியாழக்கிழமை (25.07.24) பயணித்த பேருந்தில் இளைஞன் ஒருவர் வெடிமருந்துகளை கொண்டு செல்வதாக காவற்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பேருந்தினை மறித்து சோதனையிட்டனர்.
அதன் போது பேருந்தில் இருந்து 01 கிலோ கிராம் வெடி மருந்து (ரி.என்.ரி) மீட்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து , அதனை கொண்டு வந்த அரியாலை பகுதியை சேர்ந்த 32 வயதான இளைஞனை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை சாவகச்சேரி காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.