கறுப்புயூலை படுகொலையின் 41 ஆம் ஆண்டுநினைவேந்தலும் பொதுக் கூட்டமும் யாழில் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்க மண்டபத்தில் இவ் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது.
கடந்த 1983 ஆம் ஆண்டு ஜீலை 25-27 ஆம் திகதிகளில் வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட 53 அரசியற் கைதிகள் உள்ளிட்ட அனைவரையும் நினைவுகூர்ந்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் பொதுச் சடரை ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஏனையவர்களும் சுடரேற்றி மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இவ் நினைவேந்தல் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் என்.சிறிகாந்தா உள்ளிட்ட ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்கள் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் மற்றும் யூலை கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.