620
நன்னிலம்
நன்னிலம் மரபார்ந்த மரக்கன்றுகள், செடிகள், விதைகளின் அறிமுகமும் பகிர்வுக்குமான சந்திப்பு களமானது27, 28.07.2024 அன்று மாமாங்கேஸ்வரர் ஆலயம் முன்றலில் காலை 10 மணியளவில் “நாங்கள் வாழ வேண்டும் இந்த பூமியில்……” எனும்
பாடலுடன் ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து பேராசிரியர் சி. ஜெயசங்கர் அவர்களினால் நன்னிடம் தொடர்பாகவும் மரபார்ந்த மரக்கன்றுகள் செடிகள் பழங்களானது இக்காலகட்டத்தினை பொறுத்தவரையில் மறக்கப்பட்டும் மறக்கடிக்கப்பட்டும் இல்லாமலும் இல்லாமலாக்கப்பட்டும் உள்ளது. இவ்வாறான நமக்கே உரித்தான மூலிகைகள், செடிகள், பழங்கள் குறித்த மீட்டலாகவும் தெரியாதவற்றை ஏனையவர்களுக்கு தெரியப்படுத்துவதாகவும், மற்றவர்களுக்கு தெரிந்தவற்றை நாம் தெரிந்து கொள்வதற்காகவும் இச்சந்திப்பானது ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்று கூறி மேலும் சில விடயங்களையும் அங்கிருந்தவர்களுக்கு கூறினார். அதனைத் தொடர்ந்து திருமதி. சிந்துஉசா விஜேந்திரன் அவர்களினால் “நன்னிலமானது மூன்று வருடங்களாக அவர்களின் சொந்த முயற்சியினால் உருவாக்கப்பட்டு அதனோடு ஆர்வம் இருப்பவர்களை அவர்களுடன் இணைத்து அவர்களது வீட்டின் சிறிய பகுதிக்குள் இந்த செயற்பாட்டை முன்னெடுத்ததாகவும், இவ்வாறு ஆர்வமுள்ளவர்களின் அநேகமானவர்களின் அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடிந்ததாகவும் மென்மேலும் இச் செயற்படானது தொடரச்சியாக இடம்பெறும்” என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து அங்கு இந்நிகழ்வில் கலந்துகொண்ட அத்தோடு நன்னிலத்தில் ஆர்வம் உள்ளவர்கள் இணைந்து ஒரு கலந்துரையாடலானது அமர்ந்திருந்து இடம்பெற்றது. அதில் மண்டூர் மற்றும் வந்தாறமூலையை சேர்ந்த இரு ஐயாக்கள் தங்களது கருத்துக்களை பரிமாற்றிக் கொண்டார்கள்.
இக்கருந்து உரையாடலில் மூலிகை செடிகள் தொடர்பாகவும் அதன் பயன்பாடுகள் தொடர்பாகவும் கூறப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல அதை பாரம்பரிய கிழங்குகள், பழங்கள் தொடர்பாகவும் தங்களது அனுபவங்களையும் கருத்துக்களினையும் தெரிவித்தார்கள். உதாரணமாக நஞ்சறப்பாஞ்சான், சீதேவியார் செங்கழனீர், நிலவேம்பு முதலியவை விஷக்கடிக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் பூமத்தை மந்திர வேலைக்கும் மருத்துவத்திற்கும், பேய் விரட்டி, யானை வணங்கி, சீதா மட்டி, வேதாம்பட்டி முதலியவையும் பாரம்பரிய மூலிகைகள் என கூறப்பட்டது. இதில் சீதம்பட்டி அழிந்து விட்டதாகவும் கூறப்பட்டது. நாயுருவி மற்றும் வட்டு வேர் குழந்தைகளுக்கு சளிக்கு உரிய மருந்தாக கூறப்பட்டது. அத்தோடு பக்கிளி மரத்துப்பால் நீண்ட நேரம் விளக்கெரிக்க பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டது. கடல் ஆஞ்சிப்பழம்,மருங்கப்,கிளாப் பழம்,துவரம் பழம், கருக்காப்பழம், காரப்பழம், சூரப்பழம், நாயுண்ணிப்பழம், வெனீச்சம் பழம், சுரமணப்பழம், கச்சப்கொடிப்பழம் முதலானவை ஆரம்ப காலங்களில் காடுகளில் இருந்து இப்போது இல்லாமலேயே போய் விட்டதாக கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நன்னிலம் சந்திப்பு களத்தில் சூர்யா கலாச்சார குழுவின் எழுத்தாணி நாடக அறிக்கையானது இடம்பெற்றது. இந்நாடக மானது எனது நடைமுறையில் தற்காலத்தில் இல்லாத ஒழிந்து போன மற்றும் எம்மால் மறக்கடிக்கப்பட்ட அழித்தொழிக்கப்பட்ட கீரை வகைகள் தொடர்பாகவும் ஆற்றுகை செய்யப்பட்டது. அது மட்டுமல்லாது இன்றைய காலத்தில் அனைவராலும் தெரியாமல் இருந்து சுரக்காய் பொங்கல் தொடர்பாக புதிதாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. சுரக்காய் பொங்கல் செய்கின்ற முறை பின்வருமாறு
சிறந்த முற்றிய சுரக்காய் இணை தேர்ந்தெடுத்து அதனை சுத்தமாக கழுவிய பின்னர் அதன் மேற்பாகத்தினை வட்டமாக மூடி போல வெட்டி எடுத்து சுரக்காயின் உள் இருக்கின்ற விதைகளை அகற்றி அவ் விதைகளை காய வைத்தல். காரணம் மீண்டும் நடுவதற்காக. பின்னர் அத்துளையினுள் அரிசி, பயறு, பசுப்பால் அல்லது தேங்காய் பால், சர்க்கரை அல்லது கருப்பட்டி உடம்பு ஆரோக்கியம் என்பதற்காக சீனியனை தவிர்ப்போம். இவை அனைத்தையும் போட்டுவிட்டு மூடியினை மூடி அதன் மேல் வாழை இலையினால் சுற்றி கட்டிவிட்டு, சிறியதொரு குழியினை தோன்றி அதனுள் சுரக்காய் நீ வைத்து அதன் மேல் வாழையிலை வைத்து மண்ணினால் மூடி விட்டு, அதன் மேல் விறகினை வைத்து தீ மூட்டி ஆறு மணித்தியாலங்கள் கழித்து அதனை எடுத்து பார்க்கும்போது அருமையான சுரைக்காய் பொங்கல் தயாராக இருக்கும். இது பாரம்பரிய செய்திகளான சுரக்காய் பொங்கல் வைக்கும் முறையாக அந்நாடகத்தில் கூறப்பட்டிருந்தது.
எழுத்தாணி என்ற கீரையானது அனைவருக்கும் தெரியாத ஒரு கீரையாகவே இருந்தது. இது கடற்கரையில் இராவணன் மீசை அடம்பன் கொடியின் கீழ் முளைக்கின்ற சமையலுக்கு உகந்த ஒரு கீரை வகையாகும். அபிவிருத்தி மற்றும் மாநில நடவடிக்கையின் காரணமாக இது இல்லாமல் ஆக்கப்பட்டதோடு எதிர்கால சந்ததியினர் அறியாத ஒரு விடயமாக மாற்றிவிட்டார்கள். மேலும் இந்நிகழ்ச்சியின் போது ஆலயத்திற்கு வருகை தந்த பக்த அடியார்களினால் இந்நிகழ்ச்சிகள் பார்வையிடப்பட்டதுடன் தெரியாத மூலிகைகள் தொடர்பாகவும் அறிந்து கொண்டதுடன் அவர்களுக்கு தெரிந்தவை தொடர்பாகவும் கூறினார்கள். மேலும் நாடகம் அளிக்கின் போது அவர்களின் ஆதரவினையும் வழங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து நன்னிலத்தின் மூலிகைகளின் இலைகளின் உருவங்களை சிறுவர்களைக் கொண்டு வரைந்து இயற்கையான நிறங்களை கொண்டு நிறம் தீட்டப்பட்டது. இதற்கு தேயிலை சாயம், பச்சை இலைகளின் சாயம் மற்றும் தேக்கு இலை சாயம் முதலியவற்றை பயன்படுத்தி இயற்கையில் இயற்கை முறையில் வர்ணம் தீட்டலானது இடம்பெற்றது. இந்நிகழ்வோடு மூன்றாம் கண் நண்பர்களின் ஆதரவோடு ஒழுங்கு செய்யப்பட்ட மரபார்ந்த மரக்கன்றுகள், செடிகள், விதைகளின் அறிமுகமும் பகிர்வுக்கான சந்திப்புக்களமானது மாலை 6 மணி அளவில் இனிதே நிறைவடைந்தது.
கோபாலகிருஷ்ணன் டினுஜா
Spread the love