457
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவுக்கு எதிராக அமைச்சர் பந்துல குணவர்தன முறைப்பாடு செய்துள்ளார் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சர் பந்துல குணவர்தனவிற்கு எவ்வித அறிவித்தலும் வழங்காமல் ஹோமாகம பொதுஜன பெரமுன கூட்டத்தை ஏற்பாடு செய்தமைக்கு பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஸவுக்கு எதிராக பந்துல குணவர்தன ஹோமாகம காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
நாமல் ராஜபக்ஸ, ஒழுக்கத்தை மீறியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு இது போன்ற விஷயங்களில் காவற்துறை நடவடிக்கை எடுக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love