243
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 4 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் காரைநகரை அண்மித்த பகுதியில் அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 04 இந்திய கடற்றொழிலாளர்கள் கடந்த சனிக்கிழமை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையின் போது படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது
கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Spread the love