160
யாழ்ப்பாணத்தில் தனிமையில் இருந்த மூதாட்டி ஒருவர், சந்தேகத்திற்கு இடமான முறையில், உயிரிழந்துள்ள நிலையில், அயல் வீட்டு இளைஞன் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீசாலை வடக்கை சேர்ந்த 80 வயதுடைய நடேசப்பிள்ளை சரஸ்வதியம்பாள் என்பவரே உயிரிழந்துள்ளார்.
மூதாட்டி சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (11.08.24) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கொடிகாம காவற்துறையினர் மூதாட்டியின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த இளைஞனை சந்தேகத்தில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love